Store
  Store
  Store
  Store
  Store
  Store

பக்தியும் குற்றமும் கூட்டாளியா...?


கேள்வி : ஆன்மீகம் நிறைய வளர்ந்துள்ளது. அதே போல் குற்றங்களும் நிறைய வளர்ந்துள்ளது, இதன் காரணம் என்ன?
                                                                                                  ரவி  மதுரை  


    “கடலின் நீர்மட்டம் எந்த காலத்திலும் கூடுவதும் இல்லை. குறைவதும் இல்லை” அதே போன்று தான் மனித குற்றங்கள் குறைவதும் இல்லை. கூடுவதும் இல்லை, ஒரே சீராக இருந்து வருகிறது, அந்தக் காலத்தில் போக்குவரத்து வசதியும். தகவல் தொடர்பு வசதியும் மிகக் குறைவு, அதனால் ஒரு பகுதியில் நடக்கும் சம்பவங்களை தெரிய நாளாகும், சில நேரங்களில் தெரியாமல் போய்விடும்,

    ஆனால் இன்று அப்படியா? சமீபத்தில் தமிழகத்தை பூகம்பம் தாக்கிய 5-வது நிமிடமே உலகம் முழுவதும் தெரிந்துவிட்டது அல்லவா? மேலும் இன்னொன்றை நாம் சிந்திக்க வேண்டும்,  



   அன்றைய மக்கள் தொகையைவிட இன்றைய மக்கள் தொகை பல மடங்கு கூடியிருக்கும் போது அதக்கேற்ப குற்றங்களின் எண்ணிக்கையும் கூடும் தானே, “நாணயத்தின் இரண்டு பக்கம் போல் சமுதாயத்திலும் குற்றமும். இறைஉணர்வும் இரண்டு பக்கங்கள்”, இருள் இருந்தால்தான் வெளிச்சத்துக்கு மரியாதையுண்டு. துன்பப்பட்டால்தான் இன்பத்தின் அருமை புரியும், நன்மையும். தீமையும் மாறிமாறி நிகழ்வதுதான் உலக நியது, ஆகவே குற்றங்கள் கூடுகிறதே என்று அங்கலாய்க்காமல் நம்மை நாம் திருத்திக் கொள்ள வேண்டும்,

   நமது ஆன்ம நாட்ட முயற்சிக்கு இடையறாது நாம் பாடுபடவேண்டும், ஒவ்வொரு தனிமனிதனும் பக்திமானகாவும். ஒழுக்கசீலனாகவும் மாறிவிட்டால் உலகத்தில் குற்றவாளிகளே இருக்க மாட்டார்கள், அப்பொழுது ஒட்டுமொத்த சமுதாயமும் இறைவனை தரிசிக்கும்,









Contact Form

Name

Email *

Message *