இறைவனுக்கு பிரியமான உஜிலாதேவி இணையதள வாசகர்கள், ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் பணிவான வணக்கம். எல்லாம்வல்ல ஸ்ரீமன் நாராயணனின் அருளும் அனுக்கிரகமும் உங்கள் ஒவ்வொருவரின் இல்லத்தில் எப்போதும் நிறைவதாக !
இன்று தை அமாவாசை பொதுவாக புரட்டாசி, ஆடி, தை மாத அமாவாசைகள் நமது முன்னோர்களை நினைத்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி சாஸ்திரமுறைப்படி தர்ப்பணம் செய்யும் காலமாகும். இந்த புனித தினத்தில் புனித ஷேத்திரங்களை தேடிச்சென்று குல முன்னோர்களை வரவழைத்து தர்ப்பணம் செய்து மகிழ்பவர்கள் நம்மில் நிறையப்பேர் உண்டு. இன்று எதுவுமே செய்ய முடியாதவர்கள் கூட மனதால் உள்ளம் உருகி பெரியோர்களை நினைத்தாலே அவர்கள் மகிழ்வடைந்து நமக்கு ஆசிர்வாதங்களை நல்குவார்கள் என்று அதர்வண வேதம் சொல்கிறது.
பொதுவாக தை அமாவசை தர்ப்பணம் என்பது மிக கவனமாக செய்யப்பட வேண்டிய காரியமாகும். இதில் தர்ப்பணம் செய்ய வைக்கின்ற சாஸ்திரிகளோ செய்பவரோ மனநிலை ஒன்றி போகாமல் கடமைக்கே என்று செய்தால் அதனுடைய பலன் செய்பவர்களுக்கு எதிர்மறையாக கிடைத்து விடும் இதுமட்டுமல்ல யாருக்காக நாம் தர்ப்பணம் செய்கிறோமோ அந்த நபருடைய ஆத்மா மேலுலகில் பல இன்னல்களை அனுபவிக்க நேரிடும்.
இந்தமாதிரியான குறைகள் எதுவும் இருந்தாலும் கண்ணுக்கு தெரியாத கருத்தில் வராத தோஷங்கள் எது இருந்தாலும், அவைகள் அனைத்தையும் நீக்கி பரிபூரணமான பலனை தருவது மாசி மாத அமாவாசை தினமாகும். மாசி அமாவாசையை பொது ஜனங்கள் விமர்சையாக கடைபிடிக்கவில்லை என்பதனால் அதற்கு சிறப்பு இல்லை என்று ஆகாது. மாசி மாத அமாவாசையில் பித்ருக்கள் சாந்தி அடைவதற்கு தாந்த்ரீக சாஸ்திரப்படியான பூஜைகளை செய்வது மிகவும் சிறப்பு. இந்த காலத்தில் முன்னோர்களுக்காக ஆரம்பிக்கப்படும் பூஜைகள் நேரடியாக குறிப்பிட்ட ஆத்மாவை சென்றடைந்து அந்த ஆத்மா நற்கதி அடைய உதவி செய்கிறது என கருடபுராணம் கூறுகிறது.
கடந்த ஒன்பது ஆண்டுகளாக மாசிமாதம் அமாவாசை துவங்கி சித்திரை மாதம் அமாவாசை வரையில் அறுபது நாட்கள் பித்ருக்களுக்காக விசேஷ சாந்தி பூஜையை நமது குருஜி செய்து வருகிறார். குருஜியை குருவாக ஏற்றுகொண்ட குடும்பத்தினரின் முன்னோர்களுக்காகவும் மிக நெருக்கமான அன்பர்களுக்காகவும் சென்ற ஆண்டுவரையில் இந்த பூஜையை செய்து வருகிற போதிலும் இந்த வருடம் பூஜையை சற்று விரிவாக செய்ய விரும்பி உஜிலாதேவி வாசகர்களின் முன்னோர்களுக்காகவும் செய்ய இசைந்துள்ளார் அதன் பொருட்டே இந்த பதிவை எழுதுகிறேன்.
இந்த பூஜை நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு துவங்கி அதிகாலை மூன்றரை மணிவரை நடக்கும். பூஜை அறையில் குருஜியும் அவருக்கு உதவி செய்ய ஒரு சீடரும் தவிர வேறு யாருக்கும் அனுமதி இருக்காது. பூஜையில் பங்குபெறும் குடும்பத்தாரும் கூட நேரடியாக கலந்து கொள்ள முடியாது அதற்கு காரணம் இருக்கிறது. சாந்திக்கான ஆகுதியை பெற வருகிற ஆத்மாக்கள் நல்லதாகவும் இருக்கலாம் தீயதாகவும் இருக்கலாம் ஒருவேளை அருகிலிருக்கும் மற்ற மனிதர்களை அந்த ஆத்மாக்கள் தொற்றிக்கொண்டால் ஏற்படும் விபரீத விளைவுகளை கருத்தில் கொண்டே குருஜி யாரையும் அனுமதிப்பது இல்லை.
அறுபது நாட்கள் நடைபெறுகின்ற இந்த பூஜைக்கு எழுபதாயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகும். ஆனால் இதில் பங்கு பெறும் யாரும் பணத்தை பெரிதாக எடுப்பதில்லை காரணம், இதனால் கிடைக்கின்ற பலன்கள் அப்படி. மேலும் இந்த செலவை ஒருவரே ஏற்றுக்கொண்டால் தான் சிரமமாக இருக்கும் பலரும் தாங்கி பிடிக்கும் போது அதிகமான செலவு என்ற பேச்சுக்கே இடமில்லை.
மாசிமாத அமாவாசை சாந்தி பூஜையில் யார் வேண்டுமானாலும் அவர்களது முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக பங்குபெறலாம். முப்பாட்டன் துவங்கி யாருக்கு வேண்டுமானாலும் சாந்தி செய்யலாம். நண்பர்கள் தெரிந்தவர்கள் இவர்களுக்காகவும் கூட பூஜையில் பங்குபெறலாம். இதில் ஜாதி பேதமில்லை மதமும் கூட தடையில்லை. முன்னோர்களின் சாபம், முன்னோர்களின் பாவம் இருப்பவர்களும் அந்த குறைகளை நீக்க இதில் பங்கு பெறலாம் அதுமட்டுமல்ல சென்ற ஜென்மத்தில் யாருக்காவது துன்பம் இளைத்திருப்போமோ என்று சந்தேகப்படுபவர்கள் கூட அந்த ஆத்மாவுக்காக ப்ரீதி (சாந்தி) செய்யலாம்.
இந்த பூஜையில் பங்குபெற நீங்கள் செய்யவேண்டியது இது தான் யாருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவர்களது பெயர், அவர் இறந்த திதி, அவருக்கும் உங்களுக்கும் உள்ள உறவு, இதில் எதாவது ஒன்று தெரியவில்லை என்றாலும் பாதகமில்லை. உங்களுக்கும் - அவருக்கும் உள்ள உறவுமுறையை எழுதினால் கூட போதுமானது. இறந்தவர்களின் புகைப்படங்கள் உட்பட பிறந்த தேதி மற்றும் இறந்த தேதி இருந்தால் மிகவும் விசேஷம் இல்லையென்றாலும்கூட பாதகமில்லை. இதில் மறக்க கூடாதது சாந்தி செய்ய விரும்பும் உங்கள் பெயர், உங்கள் தகப்பனார் தாயார் பெயரும் பூர்வீக ஊரின் பெயரும் கண்டிப்பாக எழுதவும்.
பூஜை நடக்கும் அறுபது நாட்களில் உங்கள் முன்னோர்களின் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக சாந்தி மந்திரங்கள் சொல்லப்பட்டு அவர்களது ஆத்மாவை அழைத்து ஆகுதி பொருட்களை அவர்கள் விரும்புகிற வண்ணம் சாஸ்திரப்படி வழங்கி மிக விரிவாக செய்யப்படும். இப்படி செய்வதனால் எந்த ஒரு ஆத்மாவும் அரைகுறை சாந்தியோடு செல்லாமல் பரிபூரணமான மன திருப்தியோடு செல்லும். உங்கள் முன்னோர்கள் சாந்தி அடைந்து விட்டார்கள் என்பதை ஒரு வருடத்திலேயே உங்கள் வாழ்க்கையில் பல நல்ல நிகழ்வுகள் நடந்தேறுவதை வைத்து அறிந்து கொள்வீர்கள்.
மேலும் இந்த நாட்களில் பல சிவாலயங்களில், விஷ்ணு ஆலயங்களில் உங்கள் முன்னோர்களுக்காக சிறப்பு வழிபாடுகளும், அன்னதானம் உட்பட பல தானங்களும் வழங்கப்படும். இதனாலும் உங்களது முன்னோர்களின் ஆன்மா மேன்மையடையும். அப்படி அடையும் போது அவர்களிடமிருந்து நீங்கள் பெறுகின்ற வரம், அதன் பலம் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவிற்கு சிறப்பாக இருக்கும்.
உங்கள் முன்னோருக்காக இந்த சாந்தி பூஜையில் கலந்து கொள்ள விரும்புகிறீர்களா? கீழ்க்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு உடனடியாக விபரங்களை அனுப்பி வையுங்கள் அல்லது கீழ்காணும் எங்கள் முகவரிக்கு தபாலில் எழுதி அனுப்புங்கள். கண்டிப்பாக மிக கண்டிப்பாக உங்கள் தபால் முகவரியை குறிப்பிட்டு எழுதுங்கள். அப்போது தான் பிரசாதம் அனுப்பி வைக்க எங்களுக்கு வசதியாக இருக்கும். மேலும் இந்த அறுபது நாளில் என்று உங்களது முன்னோர்களுக்கான பூஜை நடக்கிறதோ அன்றிலிருந்து ஒருவாரத்திற்குள் உங்களுக்குள் பிரசாதமும் பூஜை பற்றிய விபரமும் அனுப்பி வைக்கப்படும்.
வெளிநாடுகளில் வாழ்பவர்கள் பிரசாதத்தை இந்தியாவில் உள்ள குடும்பத்தாருக்கு அனுப்பி வைக்க சொன்னாலும் அனுப்பபடும். அல்லது வெளிநாட்டு முகவரிக்கு கூட அனுப்பலாம். வெளிநாட்டு அன்பர்கள் தங்கள் தொலைபேசி எண்ணை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். பூஜையில் முன்னோர்களுக்கு சாந்தி செய்வதற்கு என்ன கட்டணம் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை சொல்லி வரன்முறை ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை முடிந்தவர்களும் இருப்பார்கள், முடியாதவர்களும் இருப்பார்கள். எனவே எல்லோருக்கும் வசதியாக அவரவர் விரும்புகிற காணிக்கையை அனுப்பி வைக்கலாம். உங்களால் பணம் கொடுக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை தபால் செலவுக்கு மட்டுமாவது அனுப்பி வையுங்கள் அன்போடு பெற்றுக்கொள்கிறோம்.
மிக விரைவாக உங்களது விபரங்களை அனுப்பினால் நன்றாக இருக்கும்.
2014 ம் வருடம் பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி நள்ளிரவு துவங்கி, ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி நள்ளிரவு வரை அதாவது மாசி மாதம் 16 ஆம் தேதி அமாவாசை முதல் சித்திரை மாதம் 15 ஆம் தேதி அமாவசை வரை இந்த பூஜை நடக்கிறது. இதை மனதில் வைத்து விபரங்களை அனுப்பினால் வசதியாக இருக்கும் ஒருவேளை பூஜை துவங்குவதற்கு முன்பு அனுப்ப முடியவில்லை என்றாலும் கூட பூஜை நடக்கும் நாளிலேயே அதாவது ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதிக்குள் அனுப்பினாலும் ஏற்றுக்கொள்ளலாம்.
2014 ம் வருடம் பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி நள்ளிரவு துவங்கி, ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி நள்ளிரவு வரை அதாவது மாசி மாதம் 16 ஆம் தேதி அமாவாசை முதல் சித்திரை மாதம் 15 ஆம் தேதி அமாவசை வரை இந்த பூஜை நடக்கிறது. இதை மனதில் வைத்து விபரங்களை அனுப்பினால் வசதியாக இருக்கும் ஒருவேளை பூஜை துவங்குவதற்கு முன்பு அனுப்ப முடியவில்லை என்றாலும் கூட பூஜை நடக்கும் நாளிலேயே அதாவது ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதிக்குள் அனுப்பினாலும் ஏற்றுக்கொள்ளலாம்.
உங்கள் வாழ்க்கையின் துயரங்கள் விலகி முன்னோர்களின் ஆசிர்வாதம் பெற்று பித்ரு தோஷம் என்பது இல்லாமல் வாழ இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள் உங்களுக்கு சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் ஏற்படும்.
- மிக முக்கிய குறிப்பு :-
இந்த பித்ரு பூஜையில் பங்குபெற நினைக்கும் நேயர்கள் ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி வரையில் தங்களது முன்னோர்களை பற்றிய விபரங்களை அனுப்பலாம்.
- காணிக்கை அனுப்ப வேண்டிய முகவரி :-
காசோலை அல்லது டிடி Guruji என்ற பெயரில் மட்டும் எடுத்து அனுப்பவும்
- வங்கி முகவரி :-
NAME - Guruji
A/C NO - 0106301000035874,
LAKSHMI VILAS BANK,
IFSC CODE - LAVB0000106,
ARAKANDANALLUR.
- தபால் முகவரி :-
குருஜி,
4/76 C காமராஜ் சாலை,
அரகண்டநல்லூர் - 605752,
திருக்கோவிலூர் (தாலுக்கா),
விழுப்புரம் மாவட்டம்,
தமிழ்நாடு.
- மின்னஞ்சல் முகவரி :-
- தொலைபேசி எண் :-
+91 - 9442426434
இப்படிக்கு
சதீஷ் குமார்