உஜிலாதேவி வாசகி
கோமதிசெல்வி
கோவை
திருப்பரங்குன்றத்தில் கோவில் கொண்டிருக்கும் சிவகுமாரனை வழிபட்டால் செல்வம் கிடைக்கும் என்றும் அலைகடல் ஆர்பரிக்கும் திருச்செந்தூரில் கொலுவிருக்கும் சுப்ரமணியனை வழிபட்டால் மனதில் தைரியமும் வீரமும் கிடைக்கும் என்றும் பஞ்சாமிருதம் மணக்கும் பழனியில் குடிகொண்ட தண்டாயுத பாணியை வழிபட்டால் பாவம் விலகும் என்றும் சுவாமி மலை சுவாமியை தரிசனம் செய்தால் ஞானம் பெருகும் என்றும் தணிகைமலை தணிகைவேலை கண்ணார கண்டு நெஞ்சார வணங்கினால் குடும்பத்தில் மங்கலம் நிறையும் என்றும் சோலை மலையானின் சுந்தர வதனத்தையும் திவ்வியமான பாதங்களையும் தரிசனம் செய்தால் கிடைக்கவே கிடைக்காது என்று ஏங்கி தவித்த அனைத்தும் கிடைக்குமென பக்தர்கள் நம்புகிறார்கள் பகவானும் அவர்கள் நம்பிக்கையை பூர்த்தி செய்கிறான்.