Store
  Store
  Store
  Store
  Store
  Store

குப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை


  ன்னிடம் அடிக்கடி ஒரு இளைஞன் வருவான், வறுமையான சூழலில் அவன் பிறந்திருந்தாலும் வறுமையை கொஞ்சம் கூட வெளிக்காட்டாத அவன் பேச்சுத் தோரணை எனக்கு ரொம்ப பிடிக்கும், எவ்வளவு பெரிய கஷ்டமான வேலை அவனிடம் சொன்னாலும் முகம் சுளிக்காமல் எத்தகைய சிரமத்தையும் தாண்டி அந்த வேலையை முடித்து விடுவான்,

  ஒருநாள் அவனிடம் நான் தனியாக பேச நேரிட்டது, அப்போது தான் அவன் மனதுக்குள் கிடந்த அத்தனை ஆசை. அபிலாஷைகளை என்னிடம் கொட்டித் தீர்த்தான், தான் கிராமத்தலையாரியின் மகன் என்பதையும். தனக்கு மிகச்சிறிய வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது என்பதையும் என்னிடம் சொல்லி நான் எப்படியும் அரசியலில் பெரிய தலைவராக ஆக வேண்டும் என்றும் அதற்கு நான் உதவி செய்ய வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டான்,

அவன் ஜாதகம் உட்பட அனைத்தையும் நான் பரிசோதித்து பார்த்தேன், அவன் அரசியல் தலைவராவதற்கான எந்தவித சாத்தியக்கூறும் இல்லையென்பதை தெளிவாக புரிந்து கொண்டேன், இருப்பினும் சில பொதுவேலைகளில் அவன் காட்டிய சிரமத்தையும். தாங்கிக் கொண்ட துயரமும் அவனுக்கு எந்த வகையிலாவது உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் மிக ஆழமாக வேர்விட்டு விட்டது,


   அந்த நேரத்தில் பஞ்சாயத்து தேர்தல் அறிவிப்பும் வந்தது, அந்த இளைஞனை அழைத்து ஒரு வசிய அஞ்ஜன தாயத்தை கட்டிக்கொள்ள கொடுத்தேன், ஒரு குறிப்பிட்ட கட்சியின் பெயரைச்சொல்லி அந்தக் கட்சியின் மாவட்ட பொறுப்பிலிருப்பவரை போய் பார், கட்சியில் சீட்டு கிடைக்கும். தேர்தலிலும் வெற்றி பெறுவாய், ஆனால் மிகக்கடினமாய் உழைப்பு இருக்கும் என்று ஆசிர்வதித்து அவனை அனுப்பி வைத்தேன், அவன் மீண்டும் என்னை வந்து பார்த்தபோது ஒன்றியக் கவுன்சிலராக தான் தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றிச்செய்தியுடன் வந்தான், அப்பொழுதுதான் அஞ்ஜனங்களுக்கு இருக்கின்ற முழு சக்தியை நான் உணர்ந்து கொண்டேன், குடும்பத்திலோ. அரசியலிலோ. பொருளாதார பலத்திலோ. ஏன்? ஜாதக அமைப்பிலும் கூட எந்த விதமான பின்பலமும் இல்லாமல் வெறும் மந்திரம். அஞ்ஜனம் இவைகளால் ஒரு நரியையும் பரியாக்கிவிடலாம் என்ற ஆண்டவனின் அனுக்கிரக சக்தியை எண்ணி வியக்காமல் என்ன செய்ய முடியும்,

அப்படி அந்த இளைஞனுக்கு என்ன அஞ்ஜனம் கொடுத்தேன் என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது, அவனுக்கு நான் கொடுத்தது ஸ்ரீ மகாலஷ்மி அஞ்ஜனமாகும்,


      இந்த மகாலாஷ்மி அஞ்ஜனம் நம்மை சகல கிரக தோஷ உபாதையிலிருந்தும் விடுவித்து இஷ்ட சித்தி ஏற்படுத்தித்தரும், மேலும் தொழில் மேன்மை. தனசமர்த்தி. புகழ். பதவி. அனுகூலம். வியாபாரம். உத்தியோகம் ஆகிய எல்லாத்துறைகளாலும் தனலாபத்தையும். மன ஆசைகளையும் மிக சுலபமாக நாம் அடைய வழிவகை செய்யும், துர்மரணம். தீய ஆவிகளின் தொல்லை. செய்வினை தோஷம். முன்னோர்களின் சாபம். கர்ம வியாதி ஆகிய சகலமும் இந்த அஞ்ஜனத்தால் தீரும், இதில் உள்ள மகாவிஜயதன ஆகர்ஷன மூலிகையின் மகிமை பணம். பதவி ஆகியவற்றை ஈர்த்துத்தர வல்லது, இதை எந்த வயதினரும் எந்த பாலினரும். எந்த மதத்தினரும் உபயோகப்படுத்தலாம்,

  இந்த அஞ்ஜனம் செய்ய கரும் துளசி. வேர். நீர். சாம்பிராணி இலை. வெண் தாமரைக்கொடி. சந்தன இலை. அதிமதுரவேர் ஆகிய ஐந்து பொருட்கûளுயம் சமபங்காக எடுத்துக்கொண்டு

“ஹரீ - ஓம் - மகா - தேவீ - மகா
லட்சுமி - சர்வ - மங்கள -
பிரதயினி - மம - பிரயத்தன -
காரிய சித்தி -”


   என்ற மந்திரத்தை 1008 தடவை பௌர்ணமி தினம் சந்திரோதய சமயம் கிழக்கு முகமாக உட்கார்ந்து ஜபம் செய்து பின் மேற்படி குறிப்பிட்ட ஐந்து பொருட்களையும் புது மண்சட்டியில் அத்திமர சமித்தால் நெருப்பு ஏற்படுத்தி ஒவ்வொரு பொருளாக போட்டு கரியாக்கி நன்றாக தூள் செய்து தனியாக எடுத்துக் கொண்டு பசு நெய்யில் கலந்து வெண்ணைபோல் உருட்டிக்கொள்ள வேண்டும்,


  பின்பு சாம்பிராணி எண்ணெய். சந்தன எண்ணெய். அசல் வேப்பம் எண்ணெய். கடுகு எண்ணெய். வசம்பு எண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய்களை சமமாக கலந்து முன்சொன்ன மூலிகை சாம்பல் உருண்டையை கொட்டி கலந்து வெள்ளி அல்லது பீங்கான் கிண்ணியில் அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும்,
பின்னர்

“ஹரி - ஓம் - மாக - தேவீ -
மகா - லட்சுமி - ஓம் - ஸ்ரீம் - க்லீம் -
ஹரீம் - ஸ்ரீம் - ஆகச்சா -
ஆகச்சா -
மம - மந்திரே - திருஷ்டத் -
திருஷ்டத் - ஸ்வாஹா”


  என்ற மூல மந்திரத்தை நாற்பத்தெட்டு தினங்கள் சந்தியாவந்தன நேரத்தில் வடக்கு முகமாக உட்கார்ந்து தினசரி 2016 தடவைகள் ஜபம் செய்து அஞ்ஜனத்தில் ஊதிவிடவும் இதேபோல் நாற்பத்தெட்டு நாள் செய்து நாற்பத்தொன்பதாம் நாள் ஐந்து அம்மன் கோவில் சென்று அம்மனை தரிசனம் செய்து பின்னர் அஞ்ஜனத்தை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்,



    இதேபோன்று சரஸ்வதி அஞ்ஜனம் என்று ஒன்று உள்ளது, இதை மை போலவும் உபயோகம் செய்யலாம், சாம்பிராணி போல் தூபம் போட்டு வாசனையும் பிடிக்கலாம், இதனால் ஞாபகமறதி. சபைக்கூச்சம். திக்குவாய். படிப்பில் ஊக்கமின்மை. தொழில் சிறத்தையின்மை. குரல் வியாதிகள் விலகும்,
இது செய்ய தேவையான பொருட்கள் கருந்துளசி வேர். ஜாண்டு காய்கள். நெறிஞ்சி முள். வாலாட்டி மர இலை. வேப்பம்பழம். யானை வணங்கி வேர். பலாவேர். தொட்டாசுருங்கி வேர். மாதுரை இலை. கருவேம்புச்சாறு. சீந்தல் கொடி. நன்னாரித்தூள். விஷ்ணுகிரந்தி இலை. சிவகிரந்தி இலை. பிரம்ம பத்திரம்.
வாதநாராயணப்பட்டை. மருதம்பட்டை. சீகத்துக்காய்தூள். இலவஞ்சிக்கொடி. கடலைச் செடியின் வேர் ஆகிய இருபது மூலிகைகளையும் நிழலில் தனித்தனியாக உலர்த்தி சமஎடை எடுத்து இடித்து நன்றாக தூள் செய்து விபூதி பக்குவமாக்கி அத்துடன் இருநூறு கிராம் கற்பூரத்தை பொடி செய்து பசங்கன்று குட்டியின் சாணத்தில் பிசைந்து அதனுள் மேற்படி மூலிகைப்பொருட்களை கொழுக்கட்டையில் பூரணம் வைப்பது போல் வைத்து உருட்டி ஒன்பது நாட்கள் வெயிலில் காயவைத்து வைத்துக்கொள்ள வேண்டும்,



  10-ஆம் நாள் சரஸ்வதியை தியானித்து காயவைத்து சாணி உருண்டைகளை எடுத்து ஒரு அகலமான பானை ஓட்டில் வைத்து கற்பூரம் சந்தனக்குச்சிகளைக் கொண்டு நெருப்பிலிட்டு அசல் விபூதியைப்போல் ஆக்கிக் கொள்ளவேண்டும், இந்த விபூதியை 1/4 கிலோ சாம்பிராணி எண்ணெயில் கலந்து கிளறி அத்துடன் ஜவ்வாது. கஸ்தூரி. குங்குமப்பூ. சந்தன எண்ணெய் இவைகளை விட்டு பிசைந்து அஞ்ஜனமாக்கிக் கொள்ள வேண்டும், பின்னர்.

“ஹரி - ஓம் - ஐம் - வேதகாரோ -
மந்த்ரகாரோ - வித்வாந் - ஸமர -
மர்தந - மஹா - மோக - நிவாஸீ -
ச மஹாகோரோ - வசீகர -”


   என்ற மூல மந்திரத்தை தினசரி 82 வீதம் 82 நாளைக்கு சொல்லி அஞ்சனத்தில் ஊதிவிட வேண்டும், அதன்பிறகு புருவங்களுக்கு மத்தியில் இந்த அஞ்ஜனத்தை பொட்டாக இட்டுக் கொண்டாலே நினைவு ஆற்றல் பெருகும், சரஸ்தி தேவியின் பரிபூரண கிருபையால் அபாரமான அறிவு ஒளி வீசும்,
இப்படி மஹா நிவர்த்தி அஞ்ஜனம். சர்ப அஞ்ஜனம். பாலாரிஷ். தோஷ நிவாரண அஞ்ஜனம். சுதர்சன அஞ்ஜனம். வசீகர அஞ்ஜனம். குபேர அஞ்சனம். சர்வசிய அஞ்சனம். அஷ்டமாசித்து மகா அஞ்சனம். பாதாள மூலி அஞ்ஜனம். ஜெயமங்கள் அஞ்ஜனம் போன்று கணக்கிடலங்கா எத்தனையோ அஞ்ஜனங்களை ஏடுகளிலும். பல மகான்களின் அனுபவ அறிவுக்களஞ்சியங்களிலும் தெரிந்தும். தெரியாமலும் மறைந்து கிடக்கின்றன, அவைகளை எல்லாம் வெளிக்கொண்டு வந்து பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களை துடைத்து நல்ல வாழ்க்கையை நாம் கொடுக்கலாம், ஆனால் இன்று நிலைமை என்ன?


 முகவரி
                 ஸ்ரீ குருஜி ஆசிரமம்,
                 விழுப்புரம் சாலை
                 காடகனூர் அஞ்சல் 605755
                 விழுப்புரம் மாவட்டம்
                 தமிழ்நாடு
                 cell no = +91-9442426434



Contact Form

Name

Email *

Message *